ஹோலிகா, நெருப்பினால் எரியாத தன்மை படைத்தவள். எனவே, தன் மகன் பிரகலாதனை அழிக்கும் பொருட்டு இரணியன், பிரகலாதனை தன் மடியில் அமர்த்திக் கொண்டு ஹோலிகாவை நெருப்பின் நடுவில் அமரும்படி கூறினான். இதனால், பிரகலாதன் நெருப்பில் எரிந்து விடுவான் என்றும் இரணியன்
நினைத்தான்.
ஆனால் மகாவிஷ்ணுவை மனதில் நினைத்தபடி ஹோலிகாவின் மடியில் அமர்ந்தான் பிரகலாதன். மகாவிஷ்ணுவின் கருணையால் பிரகலாதன் நெருப்பிலிருந்து மீண்டான். ஆனால் ஹோலிகா நெருப்பில் எரிந்து சாம்பலானாள். இதை குறிக்கும் வகையில் ஹோலி பண்டிகையன்று வெட்ட வெளியில் தீயை மூட்டி, அதன் ஒளியில் எல்லோரும் சந்தோஷமாக விளையாடி மகிழ்வர். ஹோலிகா அழிந்த தினத்தை ஹோலி என்று கொண்டாடுகின்றனர்.
கிருஷ்ண பகவான் தன் குழந்தை பருவத்திலும், பால்ய பருவத்திலும் கோபியர்களுடன் விளையாடியதுதான் இந்த ஹோலி பண்டிகை. இப்பொழுதும் ஹோலிப் பாடல்களில் கிருஷ்ணரின் லீலைகளையும், குறும்புகளையும் விவரித்து பாடுவார்கள்..
வண்ணப்பொடியை பிடிப்பிடியாய் எடுத்து கன்னியர் மேல் வாரியடித்து
கொண்டாடுகிறான் ஹோலி ,கிரிதாரி
கொண்டாடுகிறான் ஹோலி
இந்த பண்டிகை ராதாவும் கிருஷ்ணரும் விளையாடிய விளையாட்டு. ஹோலி பண்டிகையில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது, `பிச்கரிஸ்' என்னும் வண்ண நீரை பீய்ச்சி அடிக்கும் குழாயில், `குலால்' என்னும் பல வண்ண நிறங்களில் இருக்கும் சிறுசிறு துகள்களை கலந்து ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி மகிழ்வார்கள்...
3 comments:
மிகவும் கலர்ஃபுல் ஆன
படங்களும் விஷயங்களும். ;)
ஹோலி = ஜாலி !
[Word Verification என்பதை நீக்கி விட்டதாக எங்கள் மெயில் தாருங்கள். அதன் பிறகே என்னால் இனி தங்கள் பதிவுகளுக்கு கருத்துத் தர முடியும். Otherwise Sorry.]
ஹோலி பற்றி அருமையான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்...
அருமையான பகிர்வுகள்...
Post a Comment