Sunday, 11 March 2012

ஸ்ரீ யோக ஹயக்ரீவர் ஹயக்ரீவர் தியான காயத்ரி :  
ஓம் வாகீஸ்வராய வித்மஹே ஹயக்ரீவாய தீமஹி
தன்னோ ஹம்ஸஹ் ப்ரசோதயாத்


மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்க அருள்பவர்ஹயக்ரீவ மூர்த்தி. இவரை வழிபட்டால் கிரகிப்புத்திறனும், ஞாபகசக்தியும் அதிகரிக்கும். சரஸ்வதிதேவிக்கு வித்தைகளை உபதேசித்தவர் இவர். வேதங்களை திருடிச் சென்ற மதுகைடபர்களை அழித்து, பிரம்மாவிடம் அவற்றை ஒப்படைத்தவர். 


திருமால் தான் எடுத்த தசாவதாரங்களுக்கு முன்பே ஹயக்ரீவ அவதாரம் எடுத்ததாகச் சொல்வர். குதிரைமுகம் கொண்ட இவர் யோகநிலையில் தனித்தும், லட்சுமிதேவியோடு சேர்ந்தும் அருள்புரிகிறார். திருவோண நட்சத்திரத்தன்றும், புதன்கிழமையிலும் ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுவது பலன் தரும். 
 செட்டிபுண்ணியம்  ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோவிலில் மாணவ-மாணவிகளுக்காக சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனை செய்யப்படுகிறது. வித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை என்றழைக்கப்படும் இந்த பூஜை  மிகவும் விசேஷமானது. மாணவர்களுக்கு தேர்வில் ஏற்படும் பயத்தை போக்கவும், ஞாபகம் மறதி இல்லாமல் இருக்கவும், அதிக மதிப்பெண்கள் பெறவும் இந்த பூஜை செய்யப்படுகிறது.
மாணவ-மாணவிகளை தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெறுவதற்காக கல்விக்கடவுளாக விளங்கும் ஸ்ரீவேதாந்த தேசிகர் பூஜைசெய்த ஸ்ரீயோக ஹயக்ரீவர் சுவாமிக்கு ஆண்டுதோறும் ஸ்ரீவித்யா தோஷ நிவர்த்தி சங்கல்ப அர்ச்சனை நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்காண மாணவர்கள் சிறப்பு அர்ச்சனையில்  கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர். .
செட்டி புண்ணியம் ஸ்ரீயோக ஹயக்ரீவர்
பூஜையின் போது பேனா, பென்சில் வைத்து அர்ச்சனை செய்யப்படும். அதன் பிறகு தரப்படும் ரட்சையை கையில் கட்டிக்கொண்டால் கல்வியில் மேம்பாடு உண்டாகும். இதனால் மாணவர்களுக்கு கூடுதல் பலன்கள் கிடைக்கும். 
காஞ்சீபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே அமைத்துள்ளது. செட்டி புண்ணியம் கிராமம். இங்கு 350 ஆண்டுகளுக்கு முன்பு பழமைவாய்ந்த புகழ் பெற்ற ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோவில் நிர்மாணிக்கப்பட்டது.  கடலூர் அருகே உள்ள திருவேந்திரபுரம் ஸ்ரீ தேவநாதனுடைய மற்றொரு அதிசுந்தரமான பிரயோக சக்கரத்துடன் சேவை தரும் திவ்யமங்கள விக்ரகத்தை எடுத்து வந்து தம் கிராமமாகிய செட்டிப்புண்ணியம் கிராமத்தில்எழுந்தருள வைத்தார்.

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்காண மாணவர்கள் சிறப்பு அர்ச்சனையில் கலந்து கொண்டு பயன் பெறுகின்றனர்.

பயன்மிக்க பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

பள்ளிக்குழந்தைகளுக்கு தேர்வு நடக்கும் சமயம் இது மிகவும் பொருத்தமான அழகான படங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது. நன்றி.

word verification இன்னும் எடுக்கப்படவில்லை.
பின்னூட்டமிட மிகவும் தொல்லை படுத்துகிறது, ஐயா.
உடனே நீக்க ஏற்பாடு செய்யுங்கள்.

seenivasan ramakrishnan said...

Thank you

இராஜராஜேஸ்வரி said...

அதிசுந்தரமான படங்கள்.. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

word verification ஐ நீக்கிவிட்டதற்கு நன்றி.